fbpx

’பயப்படாதீங்க’..!! ’அது உங்களை ஒன்னும் செய்யாது’..!! ஜேஎன்.1 கொரோனா குறித்து மருத்துவர் தகவல்..!!

புதிதாக பரவி வரும் ஜே. என்.1 வகை கொரோனா வைரஸ் பரவலுக்கு பொதுமக்கள் அஞ்ச வேண்டாம் என தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா தொற்றும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இருப்பினும் ஆய்வுகளின்படி, ஜே.என்.1ல் ஆபத்து குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வகை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. குளிர்காலம் என்பதால் ஜே.என்.1 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

இதன் வீரியம் குறைவுதான். பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர். புதிய வகை கொரோனாவால் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன. உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது. கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என மத்திய சுகாதாரத் துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது புதிதாக பரவி வரும் உருமாறிய ஜே. என்.1 வகை கொரோனா வைரஸ் பரவலுக்கு பொதுமக்கள் அஞ்ச வேண்டாம் என தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

’ரமணா’ படத்தின் இறுதிக்காட்சியை உண்மையாக்கிய விஜயகாந்த்..!! சென்னையை நோக்கி படையெடுக்கும் கூட்டம்..!!

Fri Dec 29 , 2023
விஜயகாந்த்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர். இதனால், சென்னையே ரமணா படத்தின் இறுதிக்காட்சி போல ஆகியுள்ளது. விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த மாதம் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார். இந்நிலையில், மீண்டும் உடல் […]

You May Like