Measles: டெக்சாஸின் கெய்ன்ஸ் கவுண்டியில் 24 பேருக்கு தட்டம்மை தொற்று பதிவாகியுள்ளன என்றும் ஒன்பது நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ரூபெல்லா என்றும் அழைக்கப்படும் தட்டம்மை வைரஸால் ஏற்படும் தொற்றாகும். ஒருவரிடமிருந்து பிறருக்கு எளிதில் பரவ கூடிய இது சிறு குழந்தைகளுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.சிறு குழந்தைகளின் சுவாச மண்டலத்தை எளிதில் பாதித்து பின் உடல் முழுவதும் பரவும். தட்டம்மை என்பது வைரஸால் ஏற்படும் மிகவும் தொற்று நோயாகும். நோயாளியின் தும்மல் மற்றும் இரும்பல் மூலம் காற்றில் இந்த வைரஸ் தொற்று எளிதில் பரவுகிறது. குழந்தைகளுக்கு தட்டம்மை எளிதில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்பதால் குறிப்பிட்ட ஆரம்ப அறிகுறிகளை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.
பொதுவாக தட்டம்மை நோயின் ஆரம்ப அறிகுறிகள் நோய்வாய்ப்பட்ட பிறகு, 7-14 நாட்களுக்குள் தோன்றும். மிகவும் பொதுவான அறிகுறிகளில் மூக்கு ஒழுகுவது (ரன்னி நோஸ்), வறட்டு இருமல், பிங்க் ஐ எனப்படும் கான்ஜுன்க்டிவிடிஸ் (அரிப்புடன் கண் சிவத்தல்), காய்ச்சல் உள்ளிட்டவை அடங்கும். தட்டம்மை நோயுடன் தொடர்புடைய உடல் முழுவதும் தோன்ற கூடிய ரேஷஸ் முதல் அறிகுறிகள் வெளிப்பட்டதில் இருந்து 3 – 5 நாட்களுக்கு பின் தோன்றும்.
“தட்டம்மை நோயால் பாதிக்கப்படுவதையோ அல்லது அது மற்றவர்களுக்கு பரவுவதையோ தடுக்க தடுப்பூசி போடுவதே சிறந்த வழியாகும். தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் உங்கள் உடல் வைரஸை எதிர்த்துப் போராட உதவுகிறது.” என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது. தடுப்பூசிகள் என்பவை பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க கூடியவை. தொற்று பரவாது என்று பாதுகாப்பு உத்தரவாதத்தை எந்த தடுப்பூசிகளும் அளிப்பதில்லை. ஆனால் தொற்று பாதிப்பால் ஏற்படும் தீவிரத்தன்மை மற்றும் இறப்பு அபாயத்தை கணிசமாக தடுக்கிறது.
தட்டம்மையை பொறுத்த வரை அபாயத்திலிருந்து பாதுகாக்க MMR (measles, mumps, rubella) மற்றும் MMRV (measles, mumps, rubella, varicella) தடுப்பூசிகள் உள்ளன. பொதுவாக MMR தடுப்பூசி 2 டோஸ்களில் குழந்தைகளுக்கு போடப்படுகிறது. முதல் டோஸ் 12 – 15 மாதங்களுக்குள் மற்றும் இரண்டாவது டோஸ் 4 – 5 வயது வரை போடப்படுகிறது. MMRV தடுப்பூசி 2 மாதங்கள் முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. எனினும் பொதுவாக முதல் டோஸ் 12 மாதங்கள் – 15 மாதங்களுக்குள் மற்றும் இரண்டாவது டோஸ் 4 முதல் 6 வயதில் குழந்தைகளுக்கு போடப்பட்டு வருகிறது.
தட்டம்மையின் சில பொதுவான அறிகுறிகள்: அதிக காய்ச்சல், சோர்வு, இருமல், சிவக்கும் கண்கள், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, உங்கள் வாயில் வெள்ளை புள்ளிகள், தசை வலி ஆகியவை ஏற்படும். அறிகுறிகள் தோன்றிய சில நாட்களுக்குப் பிறகு, உங்கள் முகத்தில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கும் கொப்புளங்கள் பரவும்.