fbpx

’இது தெரியாம ரேஷன் கடைக்கு சென்று ஏமாந்துறாதீங்க’..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பண்டிகை காலங்களில் மக்களின் தேவைகளின் அடிப்படையில் விடுமுறையின்றி இயங்க ரேஷன் கடைகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் செயல்பட்டு வந்தன. இதனை ஈடுசெய்யும் வகையில் அடுத்ததாக விடுமுறை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி இருந்தது.

தீபாவளி நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை விடுமுறை நாட்கள் இன்றி ரேஷன் கடைகள் செயல்பட்டன. விடுமுறையின்றி இயங்கியதற்கு ஈடாக அடுத்து வரும் நாட்களில் விடுமுறை வழங்கப்படும் என உணவு பொருள் வழங்கல் துறை அறிவித்திருந்தது.

அதன்படி நவம்பர் 13ஆம் தேதி தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை போல் இன்று நவம்பர் 25ஆம் தேதி சனிக்கிழமையும் விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி, இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

உங்க அக்கவுண்ட்ல பணம் குறைஞ்சிக்கிட்டே வரும்..!! கவனிச்சீங்களா..? ஏன் தெரியுமா..?

Sat Nov 25 , 2023
Google Pay மூலம் செல்போன் நம்பருக்கு ரீ – சார்ஜ் செய்யும் போது கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் நடைபாதை, சின்னஞ்சிறு பெட்டிக்கடைகள் தொடங்கி மல்ட்டிபிளக்ஸ் மால்கள், சினிமா தியேட்டர்கள் வரை அனைத்திலும் பணப்பரிவர்த்தனை டிஜிட்டல் மயமாகி உள்ளது. ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் தற்போதைய நாட்களில் இதனை மேலும் மேம்படுத்தவும், எளிதான நடைமுறையில் பரிவர்த்தனை செய்யவும் டிஜிட்டல் செயலிகள் வந்துவிட்டன. யுபிஐ வசதி இலவசமாக […]

You May Like