ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது. மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் முக்கியமாகி உள்ளது. இப்படிப்பட்ட ஆதார் கார்டுகளிலேயே 4 வகைகள் உள்ளன.
ஆதார் லெட்டர் வகை: இது ஒரு லெட்டர் அடிப்படையிலான லேமினேட் செய்யப்பட்ட ஆதார் கடிதம் ஆகும். இதில், ஆதார் அட்டை கொடுக்கப்பட்ட வெளியிடப்பட்ட தேதி மற்றும் QR குறியீடு இருக்கும். புதிய பதிவு அல்லது பயோமெட்ரிக் மாற்றம், மொத்தமாக ஆதார் புதுப்பிப்பு செய்யப்பட்டால், புதிய ஆதார் அட்டை தபால் மூலம் மக்களுக்கு அனுப்பப்படும். ஆதார் கடிதத்தை அதுவரை தாற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அதே சமயம் இந்த ஆதார் கடிதம் இருந்தால் மட்டுமே தபாலில் வரும் கார்டை வாங்க முடியும்.
eAadhaar: eAadhaar என்பது ஆதாரின் மின்னணு வடிவமாகும். இதில் பாதுகாப்பான QR குறியீடு இடம்பெற்று இருக்கும். அதேபோல் ஆன்லைனில் திறக்க கடவுச்சொல் கொடுக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் eAadhaar/masked eadhaar ஐ எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். அதற்கு ஓடிபி வரும். eAadhaar/masked eAadhaar பொதுவாக ஆதார் கார்டில் உள்ள கடைசி 4 இலக்கங்களை மட்டுமே காட்டும்.
இதில்தான் காகித ஆதார் அட்டை பாதுகாப்பானது இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது எளிதாக கிழிந்து போக, கருப்பு நிறமாக மாற, அழுக்காக, சேதம் அடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பிவிசி கார்டுகளை வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதார் பிவிசி கார்டு: ஆதார் பிவிசி கார்டு என்பது UIDAI ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதாரின் சமீபத்திய வடிவமாகும். எடுத்துச் செல்ல எளிதானது மற்றும் வலிமையானது. PVC-அடிப்படையிலான ஆதார் அட்டையானது டிஜிட்டல் முறை மூலம் கையொப்பமிடப்பட்ட ஆதார் ஆகும். இது டேம்பர் ப்ரூஃப் கொண்டது. அதேபோல் தண்ணீரில் விழுந்தாலும் வீணாகாது.
எப்படி பெறுவது?
uidai.gov.in அல்லது https://myaadhaar.uidai.gov.in/genricPVC மூலம் ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி அல்லது என்ரோல்மென்ட் ஐடி மூலம் இந்த அட்டையை பெற முடியும். இதற்கு கட்டணம் ரூ. 50 செலுத்தி மேற்கண்ட பக்கத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். அல்லது மை ஆதார் என்ற செயலியில் ஆதார் எண்ணை வைத்து லாகின் செய்து, அதிலேயே பணம் செலுத்தி பிவி கார்டை பெற முடியும். இந்திய அஞ்சல் சேவையின் ஸ்பீட் போஸ்ட் சேவை மூலம் ஆதார் தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட முகவரியில் வசிப்பவருக்கு டெலிவரி செய்யப்படும். 7 நாட்களில் இந்த புதிய பிவிசி ஆதாரை வீட்டு விலாசத்தில் பெற முடியும்.
Read More : Jio New 5g Plans | ரூ.600 வரை உயர்ந்த ஜியோ ரீசார்ஜ் கட்டணம்..!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!