fbpx

குடையை மறந்துறாதீங்க..!! இன்று 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப் போகுது..!!

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (நவம்பர் 18) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

10 மாவட்டங்களில் கனமழை

மயிலாடுதுறை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 – 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு இன்று (நவ.18) மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Read More : இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் ரூ.56,000..!! திருமணமாகாதவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..!!

English Summary

Heavy rain is likely to occur in 10 districts of Tamil Nadu today, according to the Meteorological Department.

Chella

Next Post

"நீ அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்பட்டவள் தானே.. நீ என்ன கண்ணகியா??" நயன்தாராவை கிழித்து தொங்கவிட்ட பயில்வான் ரங்கநாதன்..

Mon Nov 18 , 2024
ranganaathan-opens-up-about-nayanthara-and-her-relationships

You May Like