fbpx

மஹாளயபட்சம், புரட்டாசி மாதத்தில் ,முதல் 15 நாட்களில் இதை செய்ய மறக்காதீர்கள்….! பித்ரு தோஷத்தை போக்க எளிமையான வழிமுறை…!

பல ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் நீத்த நம்முடைய முன்னோர்களை நிச்சயம் நாம் அனைவரும் முற்றிலுமாக மறந்து போய் இருப்போம். அப்படி அவர்களைப் பற்றி மறந்து, அவர்களுக்கு செய்ய வேண்டிய எந்த விதமான சடங்கையும் செய்யாமல் இருப்பதால், நமக்கு பித்ரு தோஷம் ஏற்படும். இந்த பித்ரு தோஷம் ஏற்பட்டால், வம்சம் விருத்தி ஆகாது என்று சொல்லப்படுவதுண்டு.

இந்த பித்ரு தோஷத்தை போக்குவதற்கு, பல ஆண்டுகளுக்கு முன்னர், உயிரிழந்த நம்முடைய முன்னோர்களுக்கு மாதம்தோறும் அமாவாசை தினங்களில் விரதம் இருந்து அவர்களின் புகைப்படத்தை வைத்து, மாலை போட்டு அவர்களுக்கு பிடித்தது அனைத்தையும் வாங்கி வைத்து, விரதம் இருப்பதன் மூலமாக, நம்முடைய முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலமாக, பித்ரு தோஷம் நீங்கி நம்முடைய வம்சம் தழைக்கும் என்று சொல்லப்படுகிறது.

வருடம் முழுவதும் நாம் முன்னோர்களுக்காக அதனை செய்து வந்தாலும், இந்த புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசைக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. அதாவது அமாவாசைக்கு முன்பாக வரும் 15 நாட்கள் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றது. அதாவது அந்த 15 நாட்களும் இறந்து போன நம்முடைய முன்னோர்கள், பூமிக்கு வருவார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் பித்ருலோகத்திலிருந்து பூமிக்கு வரும் அவர்கள், நம்முடைய வீட்டை பார்ப்பார்கள் என்றும் சொல்லப்படுகின்றது.

புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய இந்த 15 நாட்களை மகாளய பட்சம் என்று சொல்கிறார்கள்.. சமஸ்கிருதத்தில் பட்சம் என்றால், பதினைந்து மகாளயம் என்றால் மகத்துவம் என்ற பெயர். ஆகவே முன்னோர்களுக்கான மகத்துவமான  இந்த 15 நாட்கள் இன்று முதல் ஆரம்பமாகிறது. ஆகவே, இதுவரையில் மூதாதையர்களை வணங்கி வருபவர்களும் சரி, இதுவரையில் வணங்க மறந்தவர்களும் சரி இன்று முதல் நம்முடைய முன்னோர்களை ஆராதித்து, அவர்களுக்காக விரதம் இருக்கலாம். இன்று தொடங்கி எதிர்வரும் 15 நாட்களுக்கு இப்படி நம்முடைய முன்னோர்களுக்காக விரதம் இருந்து, அவர்களை வழிபட்டால், நம்முடைய சந்ததியினருக்கு நம் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த 15 நாட்களும் தொடர்ந்து நம்முடைய வீட்டிற்கு வரும் நம்முடைய முன்னோர்கள், நாம் அவர்களை வணங்கி விரதம் இருப்பதை கண்டு மனமகிழ்வுடன் பித்துருலோகத்திற்கு திரும்புவார்கள். அப்படி அவர்கள் மன மகிழ்வுடன் இருக்கும் போது நம்முடைய குடும்பத்தினரையும், நம்முடைய சந்ததியினரையும் மனதார ஆசிர்வதித்து விட்டு செல்வார்கள். அப்படி முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு முழுமையாக கிடைத்துவிட்டால், நம்முடைய வம்சம் விருத்தி அடைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம்.

இந்த 15 நாட்களில் நாம் நம்முடைய முன்னோர்களுக்காக செய்யும் தர்ப்பணம், பூஜை போன்ற வழிபாடுகளில், அவர்களுடைய பெயர், கோத்திரம் போன்றவற்றை சொல்லி எள்ளும் தண்ணீரும் விடும்போது, அந்த எள் நம்முடைய முன்னோர்களுக்கு உணவாகவும், அந்த தண்ணீர் அவர்களின் தாகத்தை தணிப்பதற்கும் பயன்படுகிறது.

Next Post

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க போறீங்களா..? கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Sat Sep 30 , 2023
இந்தியாவில் ரேஷன் விநியோக திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு ரேஷன் கார்டை வாங்கினால் அதன் பயன்படுத்தி எங்கிருந்து வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். ரேஷன் விநியோகம் செய்யும் உரிமை மாநில அரசுகளின் கையில் இருப்பதால், ரேஷன் கார்டு தயாரிக்கும் பணியும் மாநில அரசின் கீழ் வரும். ரேஷன் கார்டு […]

You May Like