fbpx

வீட்டில் ஏசி போடும் முன் இந்த விஷயத்தை செய்ய மறந்துறாதீங்க..!! உயிருக்கே ஆபத்து..!!

லேப்டாப், வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் போன்றவற்றை வெறும் கால்களுடன் தொடும்போது பல சமயங்களில் ஷாக் அடிக்கும். அதற்கு காரணமே வீட்டில் எர்த்திங் (Earthing) செய்யாதது தான். மின்சாதனத்தில் கோளாறு ஏற்பட்டாலும், மின்சாரம் அதில் பாயும்போது அதை தற்செயலாக தொட்டாலும் கடும் ஆபத்தை விளைவிக்கலாம். அதிக வோல்டேஜில் மின்சாரம் வரும்போது, மின்சாதனத்தின் கேபிள் இறுக்கமாக இல்லையென்றால், சாதனத்தை தொடுபவர்களுக்கு ஷாக் அடிக்கலாம்.

மின்சாரத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, வீட்டில் ஏசி அல்லது எந்தப் பெரிய உபகரணங்களையும் நிறுவும் முன்பு எர்த்திங் செய்ய வேண்டும். வீடு கட்டும்போதே, அந்த செலவோடு எர்த்திங் செய்தால், பல ஆபத்துக்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். அடிப்படையில் வீட்டில் நான்கு விதமான எர்த்திங் செய்யப்படுகிறது. இதில் பட்டை, தட்டு, குழாய் மற்றும் ஸ்ட்ரிப் எர்த்திங் ஆகியவை அடங்கும். உங்கள் வசதி மற்றும் தேவைக்கேற்ப ஏதேனும் ஒன்றை நீங்கள் செய்யலாம். முக்கியமாக, எர்த்திங் செய்வதற்கு முன்பு பயிற்சி பெற்ற எலக்ட்ரீஷியனை அணுக மறவாதீர்கள்.

Read More : செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வாங்குவது எப்படி..? ஆன்லைனில் நீங்களே வாங்கலாம்..!!

Chella

Next Post

வெறும் வயிற்றில் காஃபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள்…!

Tue May 7 , 2024
காஃபி குடித்து நம் நாளை தொடங்குவது சரியானதாக தோன்றினாலும், வெறும் வயிற்றில் காஃபியை குடிக்கும்போது, அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்வது அவசியம். நம்மில் பலர் காலைப் பொழுதைக் ஒரு சூடான காஃபியுடன் தான் நாம் அந்த நாளைத் தொடங்குகிறோம். காஃபில் உள்ள நறுமணம், கதகதப்பு மற்றும் காஃபின் அதிகரிக்கப்பட்ட நிலை ஆகியவை நம்முடைய பிஸியான நாளை காஃபியுடன் செலவழிக்க வைக்கிறது. ஆனால், வெறும் வயிற்றில் காஃபி குடிப்பதால் […]

You May Like