fbpx

கடை வாடகை, குத்தகை தொகை தர வேண்டாம்..!! தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ்..!! தள்ளுபடியாம்..!!

கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் கடைகள் மூடப்பட்டதால், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகளின் வாடகை, குத்தகை தொகை ரூ.136 கோடி தள்ளுபடி செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் 2020 ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலும், 2021 மே, ஜூன் மாதங்களிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் வணிகம் நடைபெறாத நிலையில், கடைகளுக்கான வாடகை, குத்தகையை தள்ளுபடி செய்ய வேண்டுமென நாமக்கல் நகராட்சிக்கு சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த பொன்னுசாமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், கடைகளுக்கான வாடகை, குத்தகையை தள்ளுபடி செய்யும்படி 2021 டிசம்பரில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தாமல் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்து விட்டதாக கூறி பொன்னுசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அருண் ஆஜரானார்.

அப்போது, கொரோனா ஊரடங்கு காலத்தில் கடைகள் மூடப்பட்டதால், மாநகராட்சி, நகராட்சி போன்ற நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகளுக்கான 136 கோடியே 44 லட்சத்து 34 ஆயிரத்து 828 ரூபாய் வாடகை மற்றும் குத்தகை தொகைகளை தள்ளுபடி செய்து 2023 ஜூன் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வாடகை மற்றும் குத்தகை பாக்கி இல்லாதவர்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அரசாணையை ஆய்வு செய்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Chella

Next Post

ரூ.1,000 உரிமைத்தொகை..!! களத்தில் இறங்கிய அண்ணாமலை..!! ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

Sat Oct 14 , 2023
அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கக்கோரி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் தகுதி பெற்றுள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்குக்கு ரூ.1,000 […]

You May Like