fbpx

உயிர்போகும் நிலை வந்தாலும் தைரியத்தை கைவிடாதே!… சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், உலகில் அமைதியையும், சமாதானத்தையும் பரப்பிய தூதுவராக விளங்கிய வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று.

விவேகானந்தரின் ஆற்றல் மிகு தோற்றமே மக்களை கிளர்ந்தெழச் செய்யும். மக்கள் கூட்டங்களை அவர் ஈர்க்கும் திறமையை வேறொருவருக்கு வாய்த்திருக்கவில்லை. விவேகானந்தர் பல்வேறு சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஈர்ப்பு விசையாக இருந்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதல்கொண்டு யோகி அரவிந்தர் வரையில் பல்வேறு சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு விவேகானந்தர் ஒரு ஆதர்ச நாயகன். ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தரை ஒரு ‘ஜீனியஸ்’ என்று அழைக்கிறார். பிரபலமான விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ், விவேகானந்தரால் தான், ஈர்க்கப்பட்டதாக தெரிவிக்கிறார்.

அமெரிக்காவுக்கான இந்தியாவின் முதல் விளம்பர தூதர் விவேகானந்தர்தான் என்று தைரியமாக சொல்லலாம். இந்தியாவின் பண்பாட்டு பெருமைகள் குறித்தும், இந்து மதத்தின் பெருமைகள் குறித்தும் அமெரிக்காவில் விவேகானந்தர் ஆற்றிய எழுச்சிமிக்க உரை, இந்தியர்கள் குறித்தான அமெரிக்கர்களின் பார்வையை மாற்ற உதவியது. விவேகானந்தருக்கு இந்து மதத்தில் நிலவிய சிலமூட நம்பிக்கைகள் மீது நம்பிக்கை கிடையாது. மூட பழக்கவழக்கங்களை விவேகானந்தர் தீவிரமாக எதிர்த்தார். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்யும், இந்து தர்மத்தின் எந்த ஒரு வரையறைக்குள்ளும் கட்டுப்படாத மார்டன் சாமியார் விவேகானந்தர். நல்ல கருத்துக்கள் எந்த மதத்தில் இருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு இந்து மதத்தை பின்பற்றுவோர், அதை பின்பற்ற வேண்டும் என்று சொன்னவர் விவேகானந்தர்.

அவர் ஒரு வரையறைக்குள் அடங்காத மரபு சார்பற்ற சாமியாராக தோற்றமளித்தார். புகை பழக்கம் கொண்டவர்கள், அசைவ உணவுகள் சாப்பிடுவோர் குறித்து எந்த வருத்தமும் அவருக்கு கிடையாது. பக்தி என்பதையே விவேகானந்தர் வலியுறுத்தினாரே தவிர, அதற்கான நடைமுறைகளை கிடையாது. பக்தி யோகத்தோடு, கர்ம யோகம் செய்ய கூறியவர் விவேகானந்தர். அதாவது, சும்மா இருத்தல் ஆகாது, பற்று இல்லாமல், இறைவனுக்கு சமர்ப்பணமாக எண்ணி, நமது கடமைகளை செவ்வனே செய்ய வேண்டும் என்பதே கர்ம யோகம். இதனால் தான் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கூட இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாக இருக்கிறார் சுவாமி விவேகானந்தர். 1902ம் ஆண்டு, ஜூலை 4ம் தேதி மண்ணுலகை விட்டு விண்ணுலகை ஈர்க்க சென்ற சுவாமி விவேகானந்தரின் 121வது நினைவு தினம் இன்று. ஒரு நூற்றாண்டு கடந்தபோதிலும், அவர் இளைஞர்களின் உந்து விசையாக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்.

Kokila

Next Post

தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை!... வெளியான அறிவிப்பு!

Tue Jul 4 , 2023
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்றுமுதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் ஜூலை ஏழாம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள […]

You May Like