fbpx

Vastu Tips : இந்த செடிகள், மரங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரச்சனை தான் வரும்..!!

வீட்டை சுற்றி தாவரங்களால் கார்டெனிங் செய்வது என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயம். செடிகள் மற்றும் மரங்கள் காற்றை சுத்தப்படுத்தி தூய்மையான நச்சுத்தன்மையற்ற காற்றை சுவாசிக்க வழிவகை செய்கிறது. அதேபோல் உங்கள் வீட்டு அலங்காரத்தில் உட்புற தாவரங்களைச் சேர்ப்பது உங்கள் வாழ்க்கையில் சில நல்ல சக்திகளை சேர்க்க ஒரு அருமையான வழியாகும். 

அதே நேரம் நமது வாழ்க்கை நம்மை சுற்றியுள்ள செடி, மரங்கள் போன்றவற்றுடன் இணைந்துள்ளது. ஒரு சிலர், நான் நன்கு சம்பாதிக்கிறேன், கை நிறைய பணம் உள்ளது, ஆனால் மனம் நிம்மதியாக இல்லை என்று கூறுவார்கள். ஆனால் ஒரு சிலர், கையில் பணம் சுத்தமாக இல்லை, ஆனால் மனம் நிம்மதியாக உள்ளது என கூறுவார்கள். இதற்க்கெல்லாம், நாம் வளர்க்கும் செடி, மரங்கள் கூட காரணமாக இருக்கலாம் என்று ஆன்மீக ரீதியாக சொல்லப்படுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் கூற்றுப்படி, நமது வீட்டின் உட்புறத்திலும் சரி வீட்டை சுற்றியும் நடக்கூடாதாக சில செடிகள் மற்றும் மரங்கள் உள்ளன. ஏனெனில் வீட்டிற்குள் வைக்கப்படும் தவறான செடிகள் எதிர்மறை சக்திகளை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது. அவை சுற்றுப்புறத்தை சுற்றியுள்ள நச்சுத்தன்மையை அழிக்காது. அதுமட்டுமின்றி வீட்டினுள் தீய சக்தியை அழைத்து வருகிறது. எனவே உங்கள் வீட்டிற்கு சரியான தாவரத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில், எந்த செடிகளை எல்லாம் நாம் வீட்டில் வளர்க்க கூடாது என்பதை பற்றி பார்ப்போம்..

முட்செடிகள்: ஒரு சிலர் அழகிற்காக வீட்டிற்குள் முட்கள் கொண்ட செடிகளை வளர்ப்பதுண்டு. ஆனால், முட்கள் இருக்கும் செடிகளில் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் தன்மை உண்டு. இதனால் இந்த வகைச் செடிகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

போன்சாய் மரங்கள்: பார்ப்பதற்கு அழகாய் இருக்கும் இந்த போன்சாய் மரங்களை, பலர் பல ஆயிரங்கள் செலவழித்து வாங்குகிறார்கள். ஆனால், இந்த போன்சாய் மரங்களை, வீட்டிற்குள் வளர்க்காமல் வீட்டிற்கு வெளியே வைத்து வளர்க்கலாம். மேலும், இது போன்று அழகிற்காக வளர்க்கப்படும் சிறிய செடிகளை வீட்டின் வடக்குத் திசையில் வைக்கக்கூடாது.

புளியமரம்: பொதுவாகவே புளிய மரத்துக்கு எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் தன்மை உண்டு. வீட்டில் நடப்படும் புளியமரத்தால் வீட்டின் முன்னேற்றம் தடைபடுகிறது. மேலும் அது குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இதனால் தான் வீட்டின் முன்பு புளியமரத்தை யாரும் நடுவதில்லை. அதனால், வீட்டில் நிச்சயமாக வளர்க்ககூடாத மரங்களில் மிகவும் முக்கியமானது இந்த புளியமரமும் ஒன்று.

மூங்கில் மரம்: பல வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டைச் சுற்றி ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்க மூங்கிலை நடவு செய்கிறார்கள். ஆனால் வீட்டில் மூங்கில் மரங்களை வளர்க்க கூடாது. இந்த மரத்தை வீட்டில் நடவு செய்வதன் மூலம் அவை பல சிக்கல்களை கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Read more ; உங்கள் கால் விரல்களை வைத்தே முழு ஜாதகத்தையும் சொல்லலாம்..!! எப்படி தெரியுமா..? இதை தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

Don’t just grow these plants and trees at home

Next Post

பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்...! மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி...!

Thu Nov 7 , 2024
Women will be paid Rs.3,000 per month

You May Like