நமது வீட்டை சுத்தமாக வைத்து கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பது துடைப்பம். பலர் துடைப்பத்தை ஒரு பொருளாகவே மதிப்பதில்லை. கைக்கு வந்த இடத்தில் நாம் துடைப்பத்தை வைப்பது உண்டு. ஆனால் இது மிகவும் தவறான செயல். நாம் கண்ட இடத்தில் துடைப்பத்தை வைப்பதால் நமக்கு வறுமை வரும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?? ஆனால் அது தான் உண்மை. பொதுவாக லட்சுமி தேவி 108 பொருட்களில் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அந்த வகையில் துடைப்பம் தான் லட்சுமி தேவியின் விருப்பமான ஒன்றாக கருதப்படுகிறது.
நாம் ஏதோ ஓர் இடத்தில துடைப்பத்தை வைத்தால், வீட்டின் லட்சுமி கடாட்சம், மேலும் வீட்டில் நன்மை தரும் விஷயங்களும் அகலும். அதனால் துடைப்பத்தை எப்போதும் வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். நாம் இப்படி செய்வதால் நம் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செல்வம் செழிக்கும். அது மட்டும் இல்லாமல், துடைப்பத்தை எப்போதும் மறைத்து வைக்க வேண்டும். மேலும், வீட்டில் பழைய துடைப்பம் இருந்தால், அங்கு எதிர்மறை ஆற்றல் நிலவும். அதேபோல், துடைப்பத்தை தலைகீழாக நிற்க வைத்தால் வீட்டில் உள்ள பணத்தை துடைத்துவிடுமாம். இதனால் துடைப்பத்தை எப்போதும் படுத்த நிலையில் மறைத்து வைக்க வேண்டும்.