fbpx

இரவில் இந்த பொருட்களையெல்லாம் கடனாக கொடுக்காதீங்க!! இல்லையென்றால் பிரச்னை!

எந்தெந்த பொருட்களை இரவில் கொடுக்கக் கூடாது என நம் முன்னோர்கள் கடைபிடித்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நம் முன்னோர்கள் பல முறைகளை கடைபிடித்து வந்தனர். முன்னோர்களின் பாரம்பரிய முறைகள் இன்றவுளம் கடைபிடிக்கப்படுகிறது. முன்னோர்கள் எதை செய்தாலும் சொன்னாலும் அதில் கண்டிப்பாக காரணம் ஒன்று ஒளிந்திருக்கும். அதில் ஒன்றுதான் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மற்றும் கடன் இரவில் கொடுக்க கூடாது என்பது. அப்படி நாம் மீறினால் கொடுத்தால் அந்த பொருட்களுடன் செல்வமும் போய்விடும். அப்படி நாம் என்னென்ன பொருட்களை கொடுக்கக் கூடாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரவில் கொடுக்கக் கூடாத பொருட்கள்:

நூல், எண்ணெய், காசு, தயிர், இரும்பு பொருட்கள் ஆகியவை இரவில் மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது. மேலும் அரிசியை தானமாக வழங்குவது நல்லது. ஆனால், வீட்டில் வைத்திருக்கும் அரிசியை எடுத்து அக்கம்பக்கத்தினருக்கு கடனாக கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தால் வீட்டில் உள்ள மகிழ்ச்சி போய்விடும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, அரிசி சுக்ரனுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இதனால் அரிசியை கடன் கொடுக்கும்போது சுக்ர தோஷம் ஏற்படும். இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்படும்.

பால், மஞ்சள், உப்பு கொடுக்கக் கூடாது:

கடுகு எண்ணெய், எள் போன்ற பொருட்கள் சனி பகவானுடன் தொடர்புடையவையாகும். எனவே சனிக்கிழமைகளில் கடுகு எண்ணெய்யை கோயிலுக்கு எடுத்துச் சென்று கொடுக்கலாம். ஆனால், பக்கத்து வீட்டுக்காரருக்கு கடன் கொடுக்கக் கூடாது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை கடன் கொடுக்கக்கூடாது. மஞ்சள் வியாழன் கிரகத்தோடு தொடர்புடையது என்பதால், மஞ்சளை கடன் கொடுக்கும்போது குரு தோஷம் உண்டாகும். மேலும்,பூண்டு, வெங்காயம் கேதுவுடன் தொடர்புடையது. எனவே இவற்றை கடனாகக் கொடுக்கும்போது வீட்டில் செழிப்பு நின்று விடும். உப்பில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். இதை கடன் கொடுக்கும்போது நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

பயன்படுத்திய செருப்பு கொடுக்கக் கூடாது:

பயன்படுத்திய செருப்பு, துணிமணிகள், பூஜை பொருட்களை மற்றவருக்கு இரவலாகக் கொடுக்கக்கூடாது. பூஜை சம்பந்தமான பொருட்கள், சிலைகளை பராமரிக்க முடியவில்லை என்றால், கோயிலில் கொடுத்து விடலாம். ஆனால், யாருக்கும் கொடுக்கக்கூடாது. துடைப்பத்தை கண்டிப்பாக யாருக்கும் தரக்கூடாது. இது வீட்டில் பணப்பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

தானமாக கொடுத்தால் கிடைக்கும் நன்மைகள்:

அன்னத்தை தானமாகக் கொடுத்து ஒருவர் அதன் மூலம் பசியாறினால் வீட்டில் உள்ள வறுமை நீங்கும். கிழிந்த மற்றும் பயன்படுத்திய துணி இல்லாமல் புதிதாக துணி எடுத்து மற்றவர்க்குக் கொடுக்கும்போது ஆயுள் விருத்தியாகும். தேனை தானமாகக் கொடுத்தால் குழந்தையில்லாத தம்பதியருக்குக் குழந்தை பிறக்கும். அரிசியை தானமாகக் கொடுக்கும்போது, பாவங்கள் நீங்கும். நெய் தானம் செய்தால் உடலில் உள்ள பல்வேறு நோய்கள் நீங்கும். பாலை தானமாகக் கொடுத்தால் வெகுநாட்களாக வீட்டில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் துக்கநிலை நீங்கும். தயிரை தானமாகக் கொடுத்தால் தம்பதியினரிடையே அன்யோன்யம் ஏற்படும்.

Read More: TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு..!! டவுன்லோடு செய்வது எப்படி..?

Baskar

Next Post

மாதம் ரூ.49,000 சம்பளம்..!! பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tue May 28 , 2024
Bharathidasan University has released a new notification to fill the vacancies of Research Associate-I, Junior Research Fellow, Project Assistant.

You May Like