நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்று தண்ணீர்.. தண்ணீர் இல்லாமல் வாழும் வாழ்க்கையை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு போதுமான தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் அவசியம். போதுமான தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.. எனவே, நீரேற்றத்தை பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியம்.. ஏனெனில் நீரிழப்பு, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
உடலின் வெப்பநிலையை பராமரிப்பதற்கும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதற்கும் தண்ணீர் உதவுகிறது.. எனவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, தண்ணீர் குடிப்பதில் சில செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்…
தண்ணீரை மிக வேகமாக குடிக்க வேண்டாம்: மிக வேகமாக தண்ணீரை விழுங்குவதால் வயிற்றின் நரம்புகள் பதற்றமடையும்.. இதனால் நச்சுகளின் வெளியீடு அதிகரிக்கிறது.. திரவங்களின் சமநிலையின்மை காரணமாக அஜீரணம் ஏற்படுகிறது. எனவே, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
சாப்பிடும் முன் தண்ணீர் குடிக்கக்கூடாது : சாப்பிடுவதற்கு முன்பு, தண்ணீர் குடிப்பது செரிமானத்தை குறைக்கிறது என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.. மேலும் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது செரிமானத்தை அதிகரிக்கிறது.. எனினும் உணவு சாப்பிட்ட பிறகு, குறைந்தபட்சம் 45 நிமிட இடைவெளியில் தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும்.
பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிக்க கூடாது : பிளாஸ்டிக் பாட்டில்களில் நீரை நீண்ட நேரம் உட்கொள்வது, பிளாஸ்டிக் உட்கொள்வதால் புற்றுநோய் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது ஆண்களில் குறைந்த விந்தணு எண்ணிக்கையையும், பெண் குழந்தைகள் முன்கூட்டியே பருவமடைதலையும் ஏற்படுத்தும்.