fbpx

’கோடை வெயிலில் மறந்தும் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க’..!! மத்திய அரசு எச்சரிக்கை..!

நாட்டின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடுமையான வெப்பத்தை சமாளிக்க முடியாமல், பொதுமக்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில், ஏப்ரல் – ஜூன் வரை நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. வெப்பத்திலிருந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சுகாதார அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட சில நடவடிக்கைகளை மத்திய சுகாதார அமைச்சகம் மேற்கோள் காட்டியுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், “ மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, வெப்ப அலைகளால் உருவாகும் வெப்பம் தொடர்பான நோய்களைச் சமாளிப்பதற்கான தயார்நிலையை மதிப்பிடுவதற்கும், வரவிருக்கும் கோடை காலத்திற்கான செயல் திட்டத்தைப் பற்றி விவாதிப்பதற்கும் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்” என தெரிவித்துள்ளது.

மேலும், கடும் வெப்பத்தை சமாளிக்க சுகாதார அமைச்சகம் சில வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. கோடை காலத்தில் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

கோடை காலத்தில் செய்ய வேண்டியவை என்ன?

நீரேற்றமாக இருக்கவும்

நேரடி சூரிய ஒளியைத் தடுக்கவும்

மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்

செய்யக்கூடாதவை என்னென்ன?

சூரிய ஒளியில் வேலை செய்வதை தவிர்க்கவும்

மதியம் 2 மணி முதல் 4 மணி வரை சமைப்பதை தவிர்க்கவும்

குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வாகனத்தில் கவனிக்காமல் விடாதீர்கள்

மது, டீ, காபி, சர்க்கரை கலந்த பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்

வெறுங்காலுடன் நடக்க வேண்டும்

தனிமையில் வாழும் முதியவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்களின் ஆரோக்கியத்தை தினமும் கண்காணிக்க வேண்டும்

உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருங்கள். திரைச்சீலைகள், ஷட்டர்கள் அல்லது சன்ஷேட்கள் மற்றும் இரவில் ஜன்னல்களைத் திறக்கவும்

பகலில் கீழ் தளங்களில் இருக்க முயற்சி செய்யுங்கள்

உடலை குளிர்விக்க மின்விசிறி மற்றும் ஈரமான ஆடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Read More : ஏலத்தில் தவறுதலாக எடுக்கப்பட்ட வீரரால் பஞ்சாப் அணி மாஸ் வெற்றி..!! சஷாங்க் சிங்கிற்கு குவியும் வாழ்த்து..!!

Chella

Next Post

ஹாலிவுட் படத்தின் காப்பியா ‘விடாமுயற்சி’? லீக் ஆன படத்தின் கதை!

Fri Apr 5 , 2024
விடாமுயற்சியின் பட கதை பிரபல ஹாலிவுட் படமான ‘பிரேக்டவுன்’ படத்தின் காப்பி என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்திற்காக அஜித் உயிரை பணயம் வைத்த வீடியோ இணையத்தில் வைரலானது. அஜித்தின் இந்த ரிஸ்க்கை ரசிகர்களும் பாராட்டினர். அதேசமயம், இந்தக் […]

You May Like