விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் தற்போது தினந்தோறும் சண்டை, சச்சரவுகள் என சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் பூர்ணிமா, மாயா, விசித்ரா இவர்களிடையில் ஒரு வாக்கு வாதம் நடைபெறுகிறது.
பூர்ணிமா விசித்ரா தயாராகி வராவிட்டாலும் பரவாயில்லை நீங்கள் வந்து இருங்கள் என்று போட்டியாளர்களிடம் சொன்னதாக கூறுகிறார். அதற்கு விசித்ரா நான் தயாராகி கொண்டிருந்தேன் என்று கூறுகிறார். பிக்பாஸ் சொல்லியிருக்கிறார் காலை செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று அதனால் தான் தயாராகி இருக்கிறோம் என்கிறார் பூர்ணிமா.
விசித்ரா சில நேரங்களில் நாங்கள் 3-வது அழைப்பு வந்த உடன் கூட ஆரம்பித்து இருக்கிறோம் என்று சொல்ல அதற்கிடையில் மாயா வேகமாக எழும்பி ராசி மூன்றாவது அழைப்பு வந்ததும் சொல்லுங்கள் வருகிறோம் என கூறுகிறார். விசித்ரா மாயாவை பார்த்து ஓவரா ஆடாத, ஒழுங்கா பேசு, இந்த மாதி பேசுனா எல்லாம் பயப்பிடுற ஆள் நான் கிடையாது என்றார்.
இதனை கேட்ட மாயா கோபத்தில் நீக்க முதல்ல ஒழுங்கா பேசுங்க, ஓவரா ஆடாதன்னு என்ன சொல்ல வேணாம் என்று கூற இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெறுகிறது. இது பெரிய சண்டையில் போய் முடிவதற்குள் பிக்பாஸ் முடிவு எடுத்தால் நன்றாக இருக்கும்.