fbpx

”ரஜினிகாந்த் கூறியதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” – வைகோ விமர்சனம்

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அரசியல் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ”ரஜினிகாந்த் சொல்வது யாருக்கும் புரியவில்லை. ரஜினிக்கே அவர் சொல்வது புரியவில்லை. அரசியலுக்கு வருவதாக சொன்னார், கட்சிக்காக ஆட்களை சேர்த்தப் பின் அரசியலுக்கு வரவில்லை என்றார். அவர் சொல்வதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று வைகோ தெரிவித்தார். மேலும், ”மதிமுக புத்துணர்ச்சி பெற்று தமிழகத்தின் அரசியல் சக்தியை தீர்மானிக்கும் அளவிற்கு உள்ளதாக தெரிவித்த அவர், மதிமுகவின் கோட்டை கோவை எனவும் இங்கிருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குவதாகவும் கூறினார்.

”ரஜினிகாந்த் கூறியதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” - வைகோ விமர்சனம்

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் சிந்தனை கொண்ட கட்சிகளை வீழ்த்த திமுகவுடன் கொள்கை அடிப்படையில் மதிமுக கூட்டணி வைத்திருப்பதாகக் கூறிய வைகோ, இந்தியாவிலே சிறப்பான ஆட்சியை திமுக நடத்தி வருவதாக பாராட்டு தெரிவித்தார். உணவு பண்டங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதால், பொதுமக்கள்தான் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும் இந்த பாதிப்பு அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும் அல்ல என்றும் தெரிவித்தார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்வதாகவும், இந்த விலைவாசி உயர்வால் நாளுக்கு நாள் மத்திய பாஜக அரசு மீது மக்களிடையே வெறுப்பு அதிகரித்து வருகிறது” என்றும் வைகோ விமர்சித்தார்.

Chella

Next Post

எட்டு வயது சிறுமியை; 55 வயது கிழவன் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்..!

Tue Aug 9 , 2022
உத்தரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் மாவட்டம் சொனவ்லி கோட்வாலி பகுதியில்‌ உள்ள எட்டு வயது சிறுமி நேற்று காலை அந்த கிராமத்தில் இருக்கும் மளிகை கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த கிராமத்தில் இருக்கும் 55 வயதான ஷம்சுல் ஹக்யூ அந்த சிறுமியிடம் பணம் தருவதாக சொல்லி அந்த கிராமத்தில் உள்ள மூடப்பட்டிருந்த இஸ்லாமிய மதப்பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த சிறுமியை ஷல்சுல் ஹக்யூ பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு, […]

You May Like