பெண்கள் யாரையும் நம்பி தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களையோ வீடியோக்களையும் எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம் என்றும் வீடியோ காலில் பேச வேண்டாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த 19 வயது பெண்ணும், சென்னையை சேர்ந்த திலீப்குமார் (22) என்ற வாலிபரும் கிளப் ஹவுஸ் மூலம் அறிமுகமாகி பின்னர், இருவரும் அவர்களுடைய புகைப்படங்களை பகிர்ந்து தொலைபேசியில் நீண்ட நேரம் பேசி வந்துள்ளனர். மேலும், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் சாட்டிங் செய்துள்ளனர். இரண்டு மாதங்களுக்குள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதையடுத்து, அந்த பெண் திலீப் குமாரிடம் பேச மறுத்துள்ளார்.
ஆத்திரமடைந்த திலீப் குமார் உனக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என்றால் ஒரே ஒரு முறை நியூடாக வீடியோ காலில் வர வேண்டும் என கூறியுள்ளார். அதை நம்பி திலிப் குமாருடன் வீடியோ காலில் அந்த பெண் ஆடைகளின்றி நிர்வாணமாக பேசியுள்ளார். இந்த வீடியோவை திலீப்குமார் ரெக்கார்ட் செய்து, அதனை பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னையை சேர்ந்த திலீப் குமார் தேடி வந்தனர். மேலும் அவர் இன்டர்நெட்டை எங்கிருந்து உபயோகப்படுத்துகிறார். இளம் பெண்ணிடம் பேசிய நிர்வாண வீடியோவை எங்கிருந்து அப்லோடு செய்தார் என்ற விவரங்களை சேகரித்த போது, அவர் துபாயில் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இதையடுத்து போலீசார் வழக்குப் பதியப்பட்டதகவலை திலீப்குமார் வெளிநாடு செல்ல உதவிய நிறுவனத்திடம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார். அதன்பேரில், ஒரு வாரத்திற்குள்ளாகவே திலீப் குமார் துபாயில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். அவர் இந்தியா வந்த தகவலை தெரிந்துகொண்ட சைபர் கிரைம் போலீசார் விரைந்து சென்று திலீப்குமாரை கைது செய்து புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.
பெண்கள் யாரையும் நம்பி தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களையோ வீடியோக்களையும் எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம். மேலும் ஆண் நண்பர்களோ காதலர்கள் அல்லது உங்களுக்கு பழக்கப்பட்டவர்களோ அவர்கள் கேட்பதற்கு இணங்க வீடியோ காலில் பேச வேண்டாம். பெண்களை மிரட்ட பயன்படுத்தப்படுகின்ற புகைப்படங்கள் பாதிக்கப்பட்ட பெண்களாகவே எடுக்கப்பட்ட அல்லது பகிரப்பட்ட புகைப்படங்களாக தான் உள்ளது ஆகவே பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.