சமையலறையில அல்லாது வீட்டு பயன்பாட்டு பொருளிலோ ஏதாவது மீதம் இருந்தால், ஏதாவது ஒரு முறையில் அதை பயன்படுத்தலாம் என்று தான் யோசிப்பார்கள். ஆனால், சில சமயங்களில் நாம் நமக்கு தெரியாமலே வீணடிக்கப்படுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில் அப்படி எதையெல்லாம் வீணடித்தோம் என்றும், இனிமேல் அதை எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றியும் பார்ப்போம்.
நாம் நமது வீடுகளில் பெரும்பாலும், உணவுகளில் உருளைக்கிழங்கை சேர்ப்பதுண்டு. அவ்வாறு நாம் அவித்த உருளைக்கிழங்கை தோலுரித்து சமையல் செய்வதுண்டு. அவ்வாறு நாம் உரிக்கும் உருளைக்கிழங்கு தோலை வைத்து கண்ணாடிகளை துடைத்தால் அது பளபளப்பாகும். அதேபோல், நாம் அனைத்து உணவுகளிலும் கறிவேப்பிலை சேர்ப்பதுண்டு. சில சாப்பாடுகளில் கொத்தமல்லி சேர்ப்பதுண்டு. இந்த இலைகளை வாங்கி நாம் ஒருசில நாட்கள் அதிகமாக வைத்திருந்தால், அது காய்ந்து விடும்.
அந்த இலைகள் காய்ந்து போகாமல் இருக்க காய்ந்த இலைகளை இட்லி சட்டியில் உள்ள நீரில் போட்டு அவித்தால், அது நல்ல மணமுடன் காணப்படும். நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காயை சாப்பாட்டிற்காக பாலை பிழிந்துவிட்டு, சக்கையை தூக்கி எறிவதுண்டு. ஆனால் அவ்வாறு அந்த சக்கையை தூக்கி எரியாமல், அதில் கலர்பொடியை சேர்த்து கலந்து, அதை வைத்து கோலம்போட்டால், கோலம் சிறப்பான அழகுடன் காணப்படும். நாம் தினமும் அரிசி கழுவும் தண்ணீரை வெறும் தரையில் ஊற்றி விடுவோம். அவ்வாறு நீரை வீணாக்காமல், நமது வீடுகளில் உள்ள செடிகளுக்கு கீழே ஊற்றினால் செடி செழிப்பாக வளரும்.
Read More : கடன் வாங்கியவர் திடீரென இறந்துவிட்டால் அந்த கடனை யார் செலுத்த வேண்டும்..? இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்..?