fbpx

’எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகளை பயன்படுத்தக் கூடாது’..!! மத்திய அரசு அதிரடி தடை..!!

சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எத்தனால் தயாரிப்பதற்கு கரும்பை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, எத்தனால் விநியோக ஆண்டு (ESY) 2023-24இல் எத்தனால் உற்பத்திக்கு கரும்பு சாறு அல்லது சர்க்கரை பாகை பயன்படுத்துவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை விதித்து நுகர்வோர் விவகார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு சர்க்கரை நிறுவனங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நோக்கில் மத்திய அரசின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக எரிபொருளுடன் கலப்பதற்கு போதுமான எத்தனால் இருப்புக்கள் கிடைப்பது குறித்து இந்த நடவடிக்கை கவலை அளிக்கிறது.

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதை நோக்கமாக கொண்ட முயற்சியின் முக்கியமான அம்சமான எரிபொருளுடன் கலப்பதற்கு எத்தனால் இருப்புகள் போதுமான அளவு கிடைக்குமா என்ற அச்சத்தை எழுப்புகிறது. நடப்பு பருவத்துக்கான உயிரி எரிபொருளை உற்பத்தி செய்ய கரும்பு சாற்றை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

புயல், வெள்ள பாதிப்பு!… பள்ளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு!

Fri Dec 8 , 2023
புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், பள்ளிகளை திறப்பதற்கு முன்னதாக செய்ய வேண்டியவைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் பெரும் வெள்ளத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னை மாநகரம் கடும் வெள்ளத்தில் தத்தளித்தது. உணவின்றி மக்கள் அவதியடைந்தனர். ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்து கட்டடங்கள் சேதமடைந்தனர். இருப்பினும், அரசு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மெல்ல மெல்ல […]

You May Like