தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு தகுதியான பெண்களை கண்டறியும் பணி ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கிறது இந்த சூழ்நிலையில் தான் சென்னை மாநகராட்சி இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதத்தில் இருக்கின்ற பயோமெட்ரிக் கருவிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பின்பு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களிடம் தெரிவித்ததாவது, சென்னை மாநகராட்சி பகுதியில் 1,417 ரேஷன் கடைகள் இருக்கின்றன இதில் 17.18 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கின்றனர் இதில் 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றனர். மீதம் இருக்கின்ற விண்ணப்பங்கள் மிக விரைவில் அச்சடிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான முகாம் 2 கட்டங்களாக நடத்தப்பட இருக்கின்றன முதலில் 600 முதல் 650 கடைகளுக்கும் மீதம் இருக்கின்ற கடைகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் நடத்தப்படும் இதில் 500 பேருக்கு ஒரு தன்னார்வலர் ஈடுபடுத்தப்படுவார் ஒரு முகாமில் 3 அல்லது 4 நியாய விலை கடைகள் இருக்கும் ஒரு நாளைக்கு 60 முதல் 80 விண்ணப்பங்களுக்கு முன்னதாகவே டோக்கன் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் இதில் 1800 பயோமெட்ரிக் கருவிகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. மண்டல அளவில் எல்லாத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோறும் இணைந்து இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு முகாமுக்கும் வழிகாட்டும் அதிகாரி நியமிக்கப்பட இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
தலைநகர் சென்னையில் மண்டல அளவில் கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. திங்கள்கிழமை முதல் இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். எல்லோருக்கும் விண்ணப்பம் கொடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்ததோடு வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு உடனடியாக வங்கி கணக்கு திறப்பதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் பொதுமக்கள் வதந்திகளை நம்பி பதற்றம் அடைய வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.