‘ஐஸ்கிரீமில் விஷம்..!’ குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. கணவர் கைது!

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமில் விஷம் வைத்துக் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வினோபாஜி நகர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக சுகமதி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சனா ஸ்ரீ (6), க்ரிஷிகா (1) ஆகிய இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு பிரச்சனைகள் இருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கோபத்தில் தன் கணவரை ஷில்பா தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த கோகுல் தன் பெரியம்மா வீட்டிற்கு சென்று அங்கிருந்து ஒரு மாதமாக ஆட்டோ ஓட்டியுள்ளார். 

இதனால் மனமுடைந்த ஷில்பா தன் இரு குழந்தைகளுக்கும் இரவில் ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பின்னர் அதே ஐஸ்கிரீமை அவரும் சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்காக சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து மறுநாள் காலை சில்பாவின் தந்தை வீட்டிற்கு வந்தபோது கதவு திறந்து கிடந்தது. உடனடியாக அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஷில்பா மற்றும் இரு குழந்தைகள் படுக்கையில் பிணமாக கிடந்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கோகுலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

‘லோகேஷ் கனகராஜ் உடன் திடீர் சந்திப்பு!’ கூலி படத்தில் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?

Next Post

6ஆம் கட்ட வாக்குப் பதிவு நிறைவு!! மேற்குவங்கம்தான் டாப்!! முழுவிவரம் இதோ!!

Sun May 26 , 2024
6ஆம் கட்ட நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 58.93 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.இந்தியாவில் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் நடைபெற்ற ஆறாம் கட்ட தேர்தலில் 58.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான மக்களவைத் தேர்தலானது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் […]

You May Like