fbpx

கவலைப்படாதீங்க..!! நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு..!! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த வாரம் மிக்ஜாம் புயல் தாக்கியது. இதனால், ஏராளமான சேதம் ஏற்பட்டது. மழை ஓய்ந்தாலும் இன்னும் வெள்ள நீர் முழுமையாக வடியாமல் இருப்பதால், மக்கள் கடும் சிரமத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த மழை வெள்ளத்தால் பள்ளி மாணவர்கள் பலர் தங்களுடைய பாடப்புத்தகங்களை இழந்து தவிக்கின்றனர்.

அவர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பாடப்புத்தகம் மற்றும் நோட்டு புத்தகம் உள்ளிட்ட உடமைகளை இழந்த மாணவர்களுக்கு நாளை முதல் புதிய பாடப்புத்தகம் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், அவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

கேப்டன் விஜயகாந்த் தலைமையில் வரும் 14ஆம் தேதி செயற்குழு, பொதுக்குழு கூட்டம்..!! வெளியான அறிவிப்பு..!!

Mon Dec 11 , 2023
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் வரும் 14ஆம் தேதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 18ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, விஜயகாந்தின் நெஞ்சு பகுதியில் உள்ள சளியை அகற்றுவதற்கான சிகிச்சைகள் நடைபெற்றது. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை சார்பில் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தது. அரசியல் தலைவர்கள், […]

You May Like