மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான சந்தேகம் தீர்க்க வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் தகவல் மையம் (Help Desk) அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் ; தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத் தொகைக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000/- அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 18.09.2023 முதல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட உள்ளது.
உதவித்தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மனுதாரர்கள் அவர்களுக்கான சந்தேகங்கள் மற்றும் தகவல்களை அறிந்துகொள்ள தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் தகவல் மையம் (Help Desk) அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 04342 230067, 04342 231500, 04342 231077, – 1077 ஆகிய தொலைபேசி எண்களிலும், தருமபுரி வருவாய் கோட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 7904002458 என்ற தொலைபேசி எண்ணிலும், அரூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 7904002458 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் தருமபுரி வட்டாட்சியர் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் – 04346 – – 04342 260927, அரூர் 296565, காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் – 9043205956, நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் 04342 – – 294939, பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் 04348 222045, – பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் – 04346 – 246544, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் 04342 255636 உள்ளிட்ட தகவல் மைய – தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.
குடும்ப தலைவிகள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தின் நிலையினை அறிந்துகொள்ளுதல், வங்கியிலிருந்து பணம் பெறுதல், நிராகரிக்கப்பட்ட மனுக்களுக்கு மேல்முறையீடு செய்தல் உள்ளிட்ட தகவல்களை மேற்கண்ட எண்களில் அல்லது அலுவலகத்தில் உள்ள தகவல் மைய அலுவலரை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ள வேண்டும்.
மேலும் மேற்கண்ட உதவித்தொகை தொடர்பாக ஒருமுறை கடவுச்சொல் (OTP) ஏதும் பயனாளியிடமிருந்து அரசுத்துறையில் கோரப்படுவதில்லை என்பதால் அவ்வாறான அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.