fbpx

Logo: தூர்தர்ஷன் லோகோ நிறம் மாற்றம்…! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்…!

மத்திய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியை புகுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில், அரசு நடத்தும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்: உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்;தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள். வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்.

பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள். தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்‌ என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ஜப்பானில் பயங்கரம்.. நேருக்கு நேர் மோதி கடலில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்கள்! ஒருவர் பலி.. 7 பேர் மாயம்!

Sun Apr 21 , 2024
ஜப்பான் கடற்படையின் 2 ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானாதில் ஒருவர் பலி, 7 பேர் மாயமாகியுள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே பசிபிக் பெருங்கடலில் அந்நாட்டு கடற்படையை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டன. அதில் தலா 4 பேர் பயணம் செய்தனர். டோக்கியோவிற்கு தெற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோரிஷிமா தீவு அருகே திடீரென்று 2 ஹெலிகாப்டர்களின் தொடர்பு துண்டானது. இதையடுத்து சம்பவ இடத்தில் 2 ஹெலிகாப்டர்களும் கடலில் விழுந்து […]

You May Like