fbpx

சேலத்தில் இரண்டடுக்கு பேருந்து நிலையம்…..! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்……!

மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் சேலத்தில் இரண்டு அடுக்கு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி என்று சொல்லப்படும் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் அமைக்கப்பட்டிருக்கின்ற இரண்டடுக்கு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றனர். சேலம் மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 96.53 கோடி மதிப்பீட்டில் இரண்டடுக்கு பேருந்து நிலையம், 19.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரியார் பேரங்காடி, 10.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போஸ் மைதானம், 14.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வ உ சி மார்க்கெட், 33 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நேரு கலையரங்கம், 28.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளப்பட்டி ஏரி புரணமைப்பு பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் செய்யப்பட்டுள்ள திட்டப்பணிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, எம் ஆர் கே பன்னீர்செல்வம், ரகுபதி, மதிவேந்தன் மற்றும் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், சட்டசபை உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுக் கொண்டனர்.

Next Post

நியூசிலாந்து தனி தீவில் இருக்கும் உலகிலேயே தனிமையான மரமான சிட்காவின் வரலாறு என்னவென்று தெரியுமா……?

Sun Jun 11 , 2023
என்னதான் உலகிலேயே பிரபலமான இடமாக இருந்தாலும் சரி, அதை எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும் சரி அந்த இடத்திற்கு என்று தனித்துவம் இருக்க வேண்டும் என்றால் அந்த இடத்திற்கான ஏதாவது ஒரு அடையாளம் இருக்க வேண்டும். அப்படி ஒரு அடையாளம் உள்ள தீவுதான் நியூசிலாந்தில் உள்ள கேம்பல் தீவு. இந்த தீவில் ஒரே ஒரு சிட்காமரம் உள்ளது இந்த தீவு நியூசிலாந்தின் மிகப்பெரிய நிலப்பரப்பில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் […]

You May Like