fbpx

காதலன் நடத்தையில் சந்தேகம்..!! திருமணத்திற்கு ‘No’ சொன்ன காதலி..!! கழுத்தை அறுத்த அதிர்ச்சி சம்பவம்..!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கடம்பூர் கிராமத்தில் அன்பழகன் என்பவரது மகள் கற்பகலட்சுமி என்ற அபிநயா (வயது 21). இவரது தந்தை இறந்த நிலையில், தனது தாயாருடன் வசித்து வருகிறார். எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரியில் பிஏ ஆங்கிலம் படித்து வந்த இவர், குடும்ப சூழல் காரணமாக பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு, தற்போது சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதற்கிடையே, இவருக்கும் மதியழகன் என்ற இளைஞருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் நடைபெற இருந்தது. ஆனால், மதியழகனின் நடத்தையில் சில மாறுபாடுகள் தெரிந்ததால், அவரை திருமணம் செய்து கொள்ள அபிநயா மறுத்துள்ளார். மேலும், மதியழகனின் நம்பரை பிளாக் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மதியழகன் கீழகடம்பூர் கிராமத்திற்குச் சென்று அபிநயாவை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த காதலன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காதலியின் கழுத்தில் வெட்டியுள்ளார். வலியால் அபிநயா அலறிதுடித்து, கத்திக் கூச்சலிட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் உடனே அவரை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .

இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் கீழ்க்கடம்பூர் கிராமத்திற்கு சென்று நேரில் விசாரணை செய்து அபிநயாவை வெட்ட பயன்படுத்தப்பட்ட அரிவாளை பறிமுதல் செய்தனர். மேலும், காதலன் மதியழகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read More : ’குதிச்சிருடா கைப்புள்ள’..!! பைக்கை தூக்க வந்த பைனான்ஸ் ஊழியர்..!! விரட்டி அடித்த உரிமையாளர்..!! குளத்தில் குதித்த பரிதாபம்..!!

English Summary

The marriage was to take place with the consent of both the families. But Abhinaya refuses to marry him as he notices some changes in his behavior.

Chella

Next Post

’அந்த சாணியில் நாம் கல் எறிய வேண்டாம்’..!! பயில்வானை வெளுத்து வாங்கிய வெங்கடேஷ் பட்..!!

Sat Oct 5 , 2024
Bailwan Ranganathan posted a video saying bad things about me. Everyone is insulting him in the comments. Please don't post insulting messages.

You May Like