fbpx

9 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கும் கனமழை..! எங்கெங்கு தெரியுமா?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஜூலை 18) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கும் கனமழை..! எங்கெங்கு தெரியுமா?

ஜூலை 19, 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல் மற்றும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

9 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கும் கனமழை..! எங்கெங்கு தெரியுமா?

ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இது தமிழகத்தை காக்க திராணியற்ற அரசு - எடப்பாடி பழனிசாமி

Mon Jul 18 , 2022
காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், கள்ளக்குறிச்சியில் மாணவி தற்கொலை விவகாரத்தில், வன்முறை சம்பவத்திற்கு தி.மு.க அரசு வெட்கப்பட்டு தலை குனிய வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்றது.  அ.தி.மு.க கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாக்களித்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதவது:- கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தை […]

You May Like