எந்த ஒரு பிரச்சனைக்கும், தற்கொலை என்பது எப்போதும் தீர்வாகாது. மாறாக அந்த பிரச்சனையை எதிர்த்து நின்று ,சமாளித்து அந்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே, அந்த பிரச்சனை முடியும் அதற்கு மாறாக ஒரு பிரச்சனைக்கு பயந்து கொண்டு, அதற்காக உயிரை மாய்த்துக் கொள்வது முட்டாள் தனமாகும்.
அந்த வகையில் தான், திருப்பூரில் ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது, திருப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், ஒரு தம்பதிகளுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. சுரேஷ், சொர்ணகலா என்ற தம்பதிகள், அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது வழக்கமாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும், சுரேஷ் தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதாக தெரிகிறது.
எப்போதும் போல, ஒரு நாள் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு பெரிதானதால், அண்டை வீட்டார் தலையிட்டு இருவருக்கும் இடையில் சமாதானம் செய்து வைத்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. பின்னர் சண்டை எல்லாம் முடிவடைந்து, சுரேஷ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
அவர் வீட்டை விட்டு வெளியேறியவுடன், சொர்ணகலா, தன்னுடைய கைபேசியில் ஒரு வீடியோவை பதிவு செய்தார். அதாவது தன்னுடைய மரணத்திற்கு தன்னுடைய கணவர், சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என்றும், மேலும் தன்னுடைய ஐந்து வயது பெண் குழந்தையை தன்னுடைய சகோதரிகள் இருவரும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து, வீடியோ பதிவு செய்து, அதன் பிறகு அதனை தனக்குத் தெரிந்த அனைவருக்கும் அனுப்பி வைத்துவிட்டு, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த விஷயம் காவல் துறையினரின் கவனத்திற்கு சென்றவுடன், காவல்துறையினர் விரைந்து வந்து, விஷம் குடித்து, தற்கொலை செய்து கொண்ட சொர்ணகலாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சொர்ணகலாவின் குடும்பத்தினர் மற்றும் அவருடைய கணவர் உள்ளிட்டோரை, விசாரித்து வருகிறார்கள். ஐந்து வயது பச்சிளம் குழந்தையை நிற்கதியாக விட்டுவிட்டு, தற்கொலை செய்து கொண்ட பெண்ணால் அந்த பகுதியில் பரபரப்பும், சோகமும் ஏற்பட்டுள்ளது.