fbpx

அண்ணாமலை பகீர்…! டி.ஆர் பாலு தொடுத்த வழக்கு…! ஜூலை 14-ம் தேதி நீதிமன்றத்தில் ஆதாரம் கொடுப்பேன்…!

திமுக எம். பி டி.ஆர் பாலு கொடுத்த வழக்கில் ஜூலை 14ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் ஆஜராக உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்த நிலையில் தான் ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவில் சொத்து பட்டியல்களை வெளியிடப் போவதாக அறிவித்தார். அறிவித்ததை போலவே சொத்து பட்டியல்லை வெளியிட்டதுடன், முதலமைச்சர் ஸ்டாலின் மீது 200 கோடி ரூபாயில் ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

அந்த பட்டியலில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், கனிமொழி,டி ஆர்.பாலு, கலாநிதி வீராசாமி அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, துரைமுருகன், பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், கலாநிதி மாறன், ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவை அண்ணாமலை வெளியிட்டார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன் மீது அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட காரணத்தினால் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த நிலையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு தாக்கல் செய்த அவதூறு வழக்கில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஜூலை 14-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட தேதியில் அனைத்து ஆதாரங்களுடன் தான் நேரில் ஆஜராகிய விளக்கமாக உள்ளதாக அண்ணாமலை உறுதி அளித்துள்ளார்.

Vignesh

Next Post

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்...! இன்று காலை 10 மணி முதல்...! யாரெல்லாம் இதற்கு தகுதி...? முழு விவரம்...

Fri Jun 16 , 2023
சேலம்‌ மாவட்டத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ இன்று நடைபெறவுள்ளது. சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ பெண்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்கள்‌ நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி இன்று சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு வளாகத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ நடைபெறவுள்ளது. இம்முகாமில்‌ உற்பத்தி, தகவல்‌ தொழில்நுட்பம்‌, ஜவுளி, வங்கி சேவைகள்‌, காப்பீடு, மருத்துவம்‌, கட்டுமானம்‌ உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின்‌ […]

You May Like