fbpx

சற்றுமுன்… உடல் நலக்குறைவால் டாக்டர் கிருஷ்ணசாமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…!

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி உடல்நலக் குறைவுக் காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இருமல்,காய்ச்சல் காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் பெய்த கனமழையால் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டம் காதல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தொண்டு நிறுவனங்கள் என பலரும் நிவாரண பொருட்களை வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி நேரடியாக பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். தற்போது உடல்நலக் குறைவால் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Vignesh

Next Post

இந்தியாவில் சரிந்த அரிசி விலை.! ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் தான் காரணமா.?

Fri Dec 29 , 2023
செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது பாஸ்மதி அரிசியின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐரோப்பாவிற்கு செல்லும் பெரும்பாலான சரக்கு கப்பல்கள் செங்கடல் வழியாகவே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இஸ்ரேல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன்கள் […]

You May Like