fbpx

அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 ஆயிரத்தை நெருங்கியது. இத்தகைய சூழலில் பட்ஜெட்க்கு பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தங்கம் இறக்குமதிக்கான சுங்கவரி என்பது 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பதாக அறிவித்தார். அவர் அறிவித்த சில மணி நேரங்களிலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.51,080-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,385-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.89-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.89,000-க்கும் விற்பனையாகிறது.

Read More : லைவில் தற்கொலை முயற்சி..!! பெண்கள் மீது வன்மம்..!! பிரபல யூடியூபர் பிரியாணி மேன் அதிரடி கைது..!!

English Summary

22 carat jewelery prices fell by Rs 240 to Rs 51,080 per gram and Rs 30 to Rs 6,385 per gram.

Chella

Next Post

கிணறு வெட்டும் பணி..!! 3 தொழிலாளர்கள் பரிதாப பலி..!! உறவினர்கள் சந்தேகம்..!!

Tue Jul 30 , 2024
3 laborers died on the spot when the rope fell while cutting the well.

You May Like