ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனையாகிறது.
எவ்வளவு விலை உயர்ந்தாலும் தங்கம் தமிழக மக்களின் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. திருமணங்கள் உள்ளிட்ட பிறந்த நாட்கள் போன்றவற்றிற்கு தங்கம் இல்லாமல் கொண்டாட்டங்கள் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அதனால் தங்கம் விலை உயரும் போது தயங்கும் மக்கள், சற்று விலை குறையும்போது உடனடியாக நகைக்கடைகளுக்கு படையெடுத்து வாங்கி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல செய்தியாக இன்று சவரனுக்கு 320 ரூபாய் விலை குறைந்துள்ளது
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூ.5,830க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.5,790-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.46,320-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.70-க்கும், பார் வெள்ளி ரூ.79,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.