fbpx

திரௌபதி முர்மு..? யஷ்வந்த் சின்கா..? நாட்டின் 15-வது குடியரசு தலைவர் யார்..? இன்று வாக்கு எண்ணிக்கை..

இன்று காலை 11 மணிக்கு குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது..

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. நடைபெற உள்ளது.. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க கூட்டணி) வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குசீட்டு முறையில் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்…

நாடாளுமன்ற கட்டிடத்தில் எம்பிக்களும், நாடு முழுவதும் 30 மையங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் மாநிலங்களின் எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர்.. இந்த தேர்தலில் 99% வாக்குகள் பதிவானது.. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வாக்குப்பெட்டிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, அன்றைய தினமே பாதுகாப்புடன் விமானம் மூலம் பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. அங்கு நாடாளுமன்ற கட்டிடத்தில் பாதுகாப்புடன் வாக்குக்ப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன..

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.. முதலில் எம்.பிக்களின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.. அதன்பின்னர் மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்படும்.. இதையடுத்து நாட்டின் 15-வது குடியரசு தலைவர் யார் என்ற முடிவு இன்று மாலைக்குள் தெரியவரும்.. எனினும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கே அதிக வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது..அவர் வெற்றி பெறும் பட்சத்தில், நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்ற சிறப்பை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

வெறும் வயிற்றில் தேன் குடித்தால் போதும்.. உடல் எடை குறைவதுடன் மேலும் பல நன்மைகள்..

Thu Jul 21 , 2022
தேனை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். தேனில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்து கூறுகள் நிறைந்துள்ளன. ஆனால் வெறும் வயிற்றில் தேனை உட்கொள்வது உங்களுக்கு அதிக நன்மை பயக்கும். காலையில் வெறும் வயிற்றில் தேனை உட்கொண்டால், உடல் எடை குறையவும், சளி தொல்லை நீங்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது. இதனுடன், தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு […]

You May Like