fbpx

டிராவிட் இதற்கு சரிப்பட்டு வர மாட்டார்.. முன்னாள் வீரர் கருத்து..!

டி20 உலக கோப்பை போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக பணிபுரிகிறார். இந்த நிலையில் கடந்த சில போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி விமர்சனத்திற்கு உள்ளாகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்த்தீவ் பட்டேல், ஹர்திக் பாண்டியா டி20 தொடரில் இரண்டு முக்கிய தவறுகளை செய்து விட்டார். ஒன்று ஹர்திக் பாண்டியா முதல் டி20 போட்டியின் போது பவர் பிளே ஓவரில் அக்சர் பட்டேலை வீச சொன்னார். இரண்டாவது டி20 போட்டியில் சாஹல் 4 ஓவர்கள் கொடுக்காமல் ஹர்திக் பாண்டியா விட்டு விட்டார். ஆனால் குஜராத் அணிக்காக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி சிறப்பாகவே இருந்தது. ராகுல் டிராவிட் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற பயிற்சியாளர் கிடையாது. நெஹ்ரா போன்ற துடிப்பான பயிற்சியாளர் டி20 கிரிக்கெட்டிலும் வேண்டும்.

சில தருணங்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் என்றும் ஒவ்வொரு முடிவும் டி20 முக்கியமானவை என்றும் குறிப்பிட்டுள்ள பார்த்தீவ் பட்டேல், அந்த முடிவுகளை கேப்டன் எடுப்பதற்கு பயிற்சியாளர் துணை நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Maha

Next Post

Parliament Monsoon Session | திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சஸ்பெண்ட்..!! மாநிலங்களவை தலைவர் அறிவிப்பு..!!

Tue Aug 8 , 2023
மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கோஷத்துக்கு ஆளுங்கட்சியும் பதில் கோஷம் எழுப்பி வருகின்றன. […]

You May Like