fbpx

மூளை அலைகள் மூலம் இருவரை தொடர்புப்படுத்திய கனவுகள்!. அறிவியல் உலகில் பெரிய மைல்கல்!. விஞ்ஞானிகள் அசத்தல்!

Dream: மூளை அலைகளைப் பயன்படுத்தி கனவுகள் மூலம் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டது ஆய்வில் தெரியவந்துள்ளதாக கலிபோர்னியாவின் REMspace என்ற நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வுக்காக ஒரு ஆண், ஒரு பெண் என இருவரை தேர்ந்தெடுத்து இருவருக்கும் கனவுகளை அடையாளம் காண பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதாவது உறக்கத்தில் ‘ரெம்’ எனும் ஒரு கட்டம் இருக்கிறது. இந்த கட்டத்தில் நாம் காணும் கனவுகளை நம்மால் அடையாளம் காண முடியும். ஆனால் இதை தொடர்ந்து அடையாளம் காண முறையான பயிற்சி அவசியம். இதன் மூலம் நாம் என்ன கனவு கண்டுக்கொண்டிருக்கிறோம் என்பதையும், கனவில் நமக்கு தேவையான சில மாற்றங்களையும் செய்து கொள்ள முடியும்.

இந்நிலையில், இந்த பயிற்சியை பெற்ற இருவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சோதனையில், முதலில் ஆண் நபர் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற பின்னர் சில விநாடிகளில் ‘ரெம்’ நிலையை அடைந்துள்ளார். இதன்போது, அவரது மூளையில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க சில பிரத்யேக கருவிகள் அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்துடன் ரெம் நிலையை அவர் அடைந்ததும், அவரது காதில் பொருத்தப்பட்டிருந்த ஹெட் போனுக்கு கம்ப்யூட்டரிலிருந்து ‘ஜிலாக்’ எனும் வார்த்தை ‘ரெமியோ’ மொழியில் அனுப்பப்பட்டுள்ளது.

ரெமியோ என்பது சிறப்பு கணினி மொழியாகும் என்பதுடன் இந்த வார்த்தையை முதல் நபர் தனது கனவில் உச்சரித்திருக்கிறார். இந்த சம்பவம் நடந்து 8 நிமிடங்கள் கழித்து இரண்டாவதாக பெண் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று ரெம் நிலையை எட்டியுள்ளார். அதன்போது, முதல் நபர் கேட்ட, ‘ஜிலாக்’ எனும் வார்த்தையை அவரும் கேட்டிருக்கிறார். எனினும் கணினியிலிருந்து அவருக்கு எந்த வார்த்தையும் அனுப்பப்படவில்லை.

எனவே உறக்கத்தின்போது கனவு வழியாக தகவல் பரிமாற்றம் நடந்திருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அத்துடன், இப்படி நடப்பது இதுவே முதல்முறை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கனவில் தகவல் பரிமாற்றம் குறித்து விளக்கிய ஆய்வாளர்கள், “இந்த ஆய்வு கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி இடம்பெற்றது. சுமார் 5 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்திருக்கிறது.

Readmore: இனி புதிய ரூ.100 நோட்டுகள்தான்!. பழைய நோட்டு செல்லாது?. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

English Summary

Dreams that connected two people through brain waves! A big milestone in the world of science! Scientists are amazing!

Kokila

Next Post

திமுக அரசும், தமிழக ஆளுநரும் காதலர்கள் போல தற்போது இணக்கமாக இருக்காங்க..! செல்லூர் ராஜூ விமர்சனம்

Thu Oct 17 , 2024
Chief Minister Stalin and his son Udayanidhi Stalin are having a photo shoot.

You May Like