பீகார் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுபாட்டு குறித்து அம்மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.கே.பதக்கின் உத்தரவில், பள்ளியில் ஆசிரியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிவதை தடை செய்கிறது மற்றும் பெண் ஆசிரியர்கள் இந்திய உடைகளை அணியவும், அதிக நிறம் கொண்ட ஆடைகளை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆண் ஆசிரியர்கள் தாடியை ஷேவ் செய்து கொண்டு பள்ளிக்கு வர வேண்டும். ஆடை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி தூய்மை, ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் நலன் தொடர்பான பிற 14 அம்சங்களும் இந்த உத்தரவில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.