fbpx

பொதுமக்கள் கவனத்திற்கு…!சென்னையில் நாளை காலை 10 மணி முதல் ஆடை கண்காட்சி…!

சென்னையிலுள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனமான நிஃப்ட் ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனமாகும். இந்தியாவிலுள்ள ஐந்து முன்னணி ஆடை வடிவமைப்புக் கல்வி நிறுவனங்களில் இது நான்காவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் ஆடை வடிவமைப்பு தொடர்பான கண்காட்சியை நடத்த உள்ளது.

மாணவர்களின் நான்காண்டு கல்வியின் கடின உழைப்பு மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி நாளை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு துறையைச் சேர்ந்த மாணவர்களின் சிறந்த வடிவமைப்புகளும், செயல்முறைத் திட்டங்களும் கௌரவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

Vignesh

Next Post

ரயில்வே பாதுகாப்புப் படையில் 9,000 காலியிடங்கள்...! செய்தியின் உண்மை என்ன...?

Sat May 27 , 2023
ரயில்வே பாதுகாப்புப் படையில் காவலர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்களின் 9,000 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என வெளியான செய்தி உண்மை இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படையில் காவலர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்களின் 9,000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு தொடர்பாக ஊடகங்களில் கற்பனையான செய்தி வெளியாகியுள்ளது. இத்தகைய அறிவிப்பு எதுவும் ரயில்வே பாதுகாப்பு படை மூலம் அல்லது ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் […]

You May Like