fbpx

தினமும் ஒரு கிளாஸ் இந்த தண்ணீரை குடித்து பாருங்க..!! உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே பார்ப்பீங்க..!!

நாம் சமையல் அறையில் அதிகம் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று பெருங்காயம். பெருங்காயத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. பெருங்காயத்தை நாம் சமையலில் சேர்ப்பது நல்லது. அதே சமயம் பெருங்காய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது. இதற்க்கு முதலில் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ½ தேக்கரண்டி பெருங்காயத் தூளை சேர்க்கவும். இந்த பெருகாயம் நீரை குடிப்பதன் மூலம் நாம் பெறும் நன்மைகள் என்ன என்பது பற்றி பார்ப்போம்..

இந்த தண்ணீரை குடிப்பதால், செரிமான மண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி, அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது. அது மட்டும் இல்லாமல், மேலும் இது வயிற்றின் பி.ஹெச் நிலையை சரி செய்ய உதவுகிறது.

பெருங்காயத்தூள், உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடல் எடை விரைவில் குறைந்துவிடும். மேலும், நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், இதய ஆரோக்கியத்திற்கும் பெருங்காயம் மிகவும் உதவியாக இருக்கும்.

குளிர்காலத்தில் நாம் பெருங்காய தண்ணீரை எடுத்துக் கொண்டால், அது சளி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்துவிடும். மேலும், தலைவலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு பெருங்காய தண்ணீரைக் குடிப்பது மிகவும் சிறந்தது. ​
மாதவிடாய் காலங்களில், பெண்களுக்கு முதுகு மற்றும் அடிவயிற்றில் ஏற்படும் வலியைக் குறைக்கப் பெருங்காயம் பேருதவி புரிகிறது.

பெருங்காயத்தூள் கணைய செல்களை தூண்டி, இன்சுலின் சுரப்பியை சுரக்கிறது. இதனால் உங்கள் இரத்த சர்க்கரை அளவானது குறைகிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் தங்களுடைய உணவுகளில் பெருங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும், பெருங்காயத்தூள் மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவற்றை தீர்க்கும். இத்தனை நன்மைகள் கொண்ட பெருங்காய நீரை தினமும் காலையில் நாம் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது.

Read More : அப்படிப்போடு..!! வந்தவுடனே ஆட்டத்தை ஆரம்பித்த ஆதவ் அர்ஜுனா..!! செம குஷியில் விஜய்..!! பயங்கர கடுப்பில் புஸ்ஸி ஆனந்த்..?

English Summary

One of the most used items in the kitchen is the agarwood.

Chella

Next Post

இன்று தைப்பூசம்.. முருகனை காண வரும் பக்தர்கள் காவடி எடுப்பது ஏன் தெரியுமா..? சுவாரஸ்ய வரலாறு இதோ..

Tue Feb 11 , 2025
Do you know why devotees who come to see Murugan take kavadi..?

You May Like