உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்பது பலரின் ஆசை. ஆனால் முறையாக எப்படி உடலை குறைக்க வேண்டும் என்பது பற்றி பலருக்கு தெரியவில்லை. இதனால் பெரும்பாலும் பட்னியாக கிடக்கின்றனர். இப்படி நாம் செய்வதால் நமது உடல் மிகவும் மோசமான நிலைமைக்கு சென்று விடும். உடல் எடையை குறைக்க மிக முக்கியமானது நாம் காலையில் சாப்பிடும் உணவுகள். இதனால் காலையில் குடிக்க இரண்டு ஸ்மூத்தி ரெசிபிகளை பற்றி நாம் பார்க்கலாம். இந்த சுவையான ஸ்மூர்த்தி குடிப்பதால் பசி தீருவதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவும்.
அன்னாசி ஸ்மூத்தி: சுவையான இந்த ஸ்மூத்தி, உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். இதற்க்கு முதலில், வாழைப்பழங்களை சிறியதாக நறுக்கி, ஃப்ரீசரில் அது கட்டியாகும் வரை வைத்து விடுங்கள். ஃப்ரீசரில் வைத்த வாழைப் பழத்தை இப்போது மிக்ஸர் ஜாரில் போட்டு, அதனுடன் தயிர் மற்றும் அன்னாசி பழம் சேர்த்து அரைத்தால் அன்னாசி ஸ்மூத்தி ரெடி.. இந்த ஸ்மூத்தியை காலை உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு பிரஷ்ஷாக தயாரித்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கீரை ஸ்மூத்தி: கீரைகள் பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் கீரை, நமது உடல் எடையை குறைப்பதற்கும் உதவும். இதனால் கீரையை பயன்படுத்தி ஸ்மூத்தி செய்து குடித்தால், உடல் எடையை எளிதாகக் குறைத்துவிட்டலாம். இந்த ஸ்மூர்த்தி செய்வதற்கு, முதலில் 10 முதல் 15 கீரை இலைகள், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன், அரை கப் தயிர், வெண்ணெய் பழம் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், இது அனைத்தையும் ஒன்றாக அரைத்து எடுத்தால் ஆரோக்கியமான கீரை ஸ்மூத்தி ரெடி.. இந்த ஸ்மூத்தியை காலையில் உடற்பயிற்சி செய்த பிறகு குடிப்பது நல்ல பலன் தரும்.