fbpx

நாடு முழுவதும் 60 லட்சம் வேலைவாய்ப்புகள்!. ரூ.4,500 கோடியில் ஓட்டுனர் பயிற்சி நிறுவனங்கள்!. நிதின் கட்கரி அறிவிப்பு!

Nitin Gadkari: நாட்டில் 22லட்சம் ஓட்டுனர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8லட்சம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்றைய கேள்வி நேரத்தின்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது, உலக வங்கியின் அறிக்கையின்படி இந்தியாவில் 22லட்சம் ஓட்டுனர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றது. நாட்டில் சரியான ஓட்டுனர் பயிற்சி வசதிகள் இல்லாததால் ஏராளமான விபத்துக்கள் நிகழ்வதோடு உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8லட்சம் பேர் சாலைவிபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.

இதில் பெரும்பாலானவை சரியான பயிற்சி பெறாத ஓட்டுனர்களால் ஏற்படுகின்றது. நாடு முழுவதும் ஓட்டுனர் பயிற்சி நிறுவனங்களை படிப்படியாக அமைப்பதற்காகவும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1600 பயிற்சி நிறுவனங்களை அமைப்பதற்காகவும் அரசு திட்டமிட்டுள்ளது. பயிற்சி நிறுவனங்களை அமைப்பதற்காக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ரூ.4,500 கோடி திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலமாக சுமார் 60லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.

ஓட்டுனர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பிராந்திய ஓட்டுனர் பயிற்சி மையங்கள் மற்றும் ஓட்டுனர் பயிற்சி மையங்கள் ஆகியவற்றை அமைப்பதற்கு பொருத்தமான திட்டங்களை அனுப்புமாறு அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

Readmore: காவியா மாறனின் காதலன் யார் தெரியுமா?. அட இவரு நம்ம இசையமைப்பாளர்தான்!. உண்மை என்ன?

English Summary

Driver training institutes across the country worth Rs. 4,500 crore!. 60 lakh jobs!. Nitin Gadkari’s announcement!

Kokila

Next Post

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதன்முறையாக இடம்பிடித்த பிரபல ஹாலிவுட் ஸ்டார் அர்னால்டு!. அம்பானி எந்த இடம் தெரியுமா?

Fri Apr 4 , 2025
Famous Hollywood star Arnold has made it to the list of the world's richest people for the first time! Do you know where Ambani is?

You May Like