fbpx

வாகன ஓட்டிகளே ஜாக்கிரதை..!! தொடர் பனிமூட்டம்..!! 6 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்..!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சண்டிகர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் சில பகுதிகளிலும் குளிர் அலையால் பனிமூட்டமான நிலை நீடித்தது. ஹரியானாவின் ஹெசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸாகவும், உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் 1.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 நாட்களுக்கு குளிர் அலை தொடரும் என எச்சரித்திருக்கிறது. வடமேற்கு இந்தியாவில் இமயமலையில் இருந்து வீசும் வடமேற்கு காற்று காரணமாக, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியப்பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸாக நீடிக்கும். தொடர்ந்து, 3 நாட்களுக்கு பிறகு 3-5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், வாகன ஓட்டுநர்கள் மிகவும் ஜாக்கிரதையுடன் வாகனங்களை இயக்கும்படி வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

நாமக்கல்: "அங்கன்வாடி பெண் ஊழியர்களை ஆபாச படம் எடுத்த பத்திரிகையாளர்.." காவல்துறை அதிரடி நடவடிக்கை.!

Sat Jan 27 , 2024
நாமக்கல் அருகே அங்கன்வாடி ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜங்களாபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. 46 வயதான இவர் பத்திரிக்கை ஒன்றில் நிருபர் மற்றும் ஏஜென்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்ற பெரியசாமி அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பெண் ஊழியர்களை மறைந்திருந்து புகைப்படம் எடுத்ததாக […]

You May Like