fbpx

டிரைவிங் லைசென்ஸ் இனி இவ்வளவு ஈசியா வாங்கலாமா..? ஆன்லைனில் உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது ஆர்டிஓ அலுவலகம் செல்லாமலேயே, ஆன்லைன் மூலமாக பொதுமக்களுக்கு சேவைகள் வழங்கும் வகையில், ஆதார் அட்டையை பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம் வாங்கி கொள்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வாகன பதிவு தொடர்பான 42 சேவைகளை பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவே பெறலாம் என்று அறிவிப்பு வெளியானாலும் கூட, டிரைவிங் லைசென்ஸை வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொள்ளும் அறிவிப்பானது மக்களை ஈர்த்திருந்தது. அதாவது, 2022-23ஆம் ஆண்டில் (பிப்ரவரி 2023 வரை) மட்டும் 6.61 லட்சம் புதிய டிரைவிங் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதாரை ஆவணமாக வைத்து, விண்ணப்பதாரர்கள் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது விருப்பமான இடத்திலிருந்தோ பழகுநர் உரிமம் (LLr) தேர்வினை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்லாமலே மேற்கொள்ளலாம்.

40 வயதிற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள், மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழைப் பெற்று உரிய ஆவணங்களை பதிவேற்றலாம். ஆதார் இல்லாத விண்ணப்பதாரர், ஆவணச் சரிபார்ப்பு மற்றும் பழகுநர் உரிமம் (LLr) தேர்வுக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். பழகுநர் உரிமத்தை பெற்ற பிறகு, ஒரு விண்ணப்பதாரர் நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு 30 நாட்களுக்குப் பிறகு https://sarathi.parivahan.gov.in/sarathiservices/state என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத் தேர்வுக்கு https://sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி..?

– முதலில், https://parivahan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

– அதில், “ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

– பிறகு, உங்கள் மாநிலம் மற்றும் ‘உரிமச் சேவைகள்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

– DL-ன் புதுப்பித்தல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் விவரங்களை பதிவிட்டு “ஆம்” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

– அதில், கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு CAPTCHA குறியீட்டை கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.

– அடுத்து, உங்கள் விண்ணப்பத்திற்கான ஒப்புகை சீட்டு கொடுக்கப்படும். பிறகு, உங்கள் வாகன ஓட்டுநர் உரிமத்தை அப்டேட் செய்வதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, பழைய DL-ஐ பதிவேற்ற வேண்டும்.

– பிறகு, கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகள் செயல்படுத்தப்படும். கட்டணம் செலுத்திய பிறகு அதன் ரசீதை, பத்திரமாக பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

– இப்போது, அடுத்த சில நாட்களில் புது Driving Licence நீங்கள் பதிவிட்ட முகவரியில் தபால் மூலம் வீட்டிற்கு வந்து சேரும்.

Chella

Next Post

ராக்கெட் கவுண்டவுன் குரலுக்கு சொந்தக்காரரான வளர்மதி காலமானார்!… விஞ்ஞானிகள் இரங்கல்!

Mon Sep 4 , 2023
இஸ்ரோவில் ராக்கெட் விண்ணில் ஏவுப்படும் நிகழ்வுகளை வர்ணனை செய்த மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமானார். இஸ்ரோ ராக்கெட் ஏவுதலின் போது கவுண்ட்டவுன் மிக முக்கியமான நிகழ்வு ஆகும். இது முழு தேசத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு சின்னமான நிகழ்வு. இந்த கவுண்டவுன் குரல், சோதனையின் நேரடி ஒளிபரப்பைக் காண கோடிக்கணக்கான மக்களை தங்கள் டிவி மற்றும் செல்போன்களைப் பிடிக்கச் செய்தது. ஸ்ரீரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுன்ட் டவுனில் குரல் […]

You May Like