ஒடிசா பகுதியில் உள்ள கியோன்ஜர் மாவட்டத்தில் ஒரு பகுதி கிராம மக்கள் இலுப்பைப் பூவை கொண்டு சாராயம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்த செயலிற்காக கிராமத்திற்கு அருகில் உள்ள பெரிய முந்திரிக்காட்டுப் பகுதியை பயன்படுத்தி உள்ளனர். பெரிய பெரிய பானைகளில் தண்ணீரை ஊற்றி அதில் இலுப்பைப் பூக்களை போட்டு ஊறவைத்தனர். இதனை தொடர்ந்து , அடுத்த நாள் காலையில் ஊறவைத்த தண்ணீரிலிருந்து ‘மக்குவா’ என்கிற நாட்டு சாராயம் தயார் செய்வதற்காக அந்த முந்திரி காட்டுக்கு அனைவரும் சென்றிருந்தனர்.
இந்த நிலையில் அங்கே வைக்கப்பட்டிருந்த பானைகள் எல்லாம் உடைக்கப்பட்ட நிலையில், அருகிலேயே சுமார் 24 யானைகள் கொண்ட கூட்டம், ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. யானைகளை எழுப்புவதற்கு அந்த கிராம மக்கள் பெரும் முயற்சி செய்தனர். ஆனால் எழுப்பவே முடியவில்லை.
மேலும் வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பெரிய மேளங்களை அடித்து சத்தத்தை எழுப்பி யானைகள் எழ வைத்தனர். யானைகள் நிச்சயம் அந்த சாராயத்தை குடித்திருக்க வேண்டும் அதானால் தான் இப்படி உறங்கி இருக்கின்ற என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.