fbpx

‘ட்ரை ஐஸ்ஸால் உயிரிழப்பு கூட ஏற்படலாம்’ – அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு அரசு

DRY ICE: இயக்குநர் மோகன் ஜி ஸ்மோக் பிஸ்கட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தை உணர்த்தும் விதமாக அதிர்ச்சி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் ஸ்மோக் பிஸ்கட்டை ஆர்வத்துடன் வாங்கி உட்கொள்ளும் சிறுவன் ஒருவன், சில நிமிடங்களிலேயே வலியால் துடிக்கிறான். பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோவை மூலமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் இயக்குனர் மோகன் ஜி வைத்திருந்தார்.

அதில், இதுபோன்று விற்கும் ஸ்மோக் பிஸ்ட என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள். அதில் ஊற்றப்படுவது லிக்விட் நைட்ரஜன், ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து. தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஸ்மோக் பிஸ்கட்டை(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உட்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படலாம். திரவ நைட்ரஜனை குடிப்பதால் திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாயை சிதைக்கிறது.

மேலும், உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது. ட்ரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள உணவு பாதுகாப்புத்துறை. மேலும் ட்ரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை, பேச்சு பறிபோகும் ஆபத்து இருப்பதாகவும், உயிரிழப்புகள் நேரலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read More: குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்த கணவன்..! மாந்தோப்புக்குள் அரங்கேறிய கொடூரம்..!

Baskar

Next Post

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 1,2,4 தேர்வு தேதிகள் அறிவிப்பு..! தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றம்… முழு விவரம்..!

Thu Apr 25 , 2024
குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 6,244 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட புதிய ஆண்டுதிட்ட அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளை தவிர மற்ற தேர்வுகளை ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுகளாக ஒன்றாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் […]

You May Like