fbpx

Weather Update: இன்று முதல் 30-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்…!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 30-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். 31-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 30-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். 31-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

Exam: 4,107 தேர்வு மையங்கள்... தமிழகம் முழுவதும் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்...!

Tue Mar 26 , 2024
தமிழகம் முழுவதும் இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடக்கம். தமிழகம் முழுவதும் இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடக்கம். இன்று முதல் ஏப்ரல் 8 வரை தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு 4,107 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 12-22ம் தேதி வரை […]

You May Like