fbpx

உஷார்…! இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்…! வானிலை மையம் தகவல்…

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, பனியின் தாக்கம் குறையும்.

தற்போது பகல் நேரங்களில் முன்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இனிவரும் காலங்களில் இரவு நேரங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும். அதன் மூலம் பனியின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வாடிக்கையாளர் கவனத்திற்கு...!எச்டிஎஃப்சி வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்துவதாக அறிவிப்பு...!

Sun Feb 19 , 2023
எச்டிஎஃப்சி வங்கி‌ நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாக அறியப்படும் எச்டிஎஃப்சி வங்கி‌, ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மொத்த நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித உயர்வுக்கு ஏற்ப வங்கி நிரந்தர வைப்புத்தொகை வட்டி விகிதத்தை பிப்ரவரி 8 அன்று 6.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படி, […]

You May Like