அமைச்சர் கே.என்.நேரு புகழ்ந்து பேசிய டிஎஸ்பி, பெண் இன்ஸ்பெக்டருடன் படுக்கையில் ஆபாசமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட காவல்துறை வாட்ஸ்அப் குழுவில் சில மாதங்களுக்கு முன், திருச்சியைச் சேர்ந்த டிஎஸ்பி பரவாசுதேவன், பெண் இன்ஸ்பெக்டருடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் வலம் வந்தது. இந்த புகைப்படம் பதிவிடப்பட்ட சில மணி நேரங்களில் அகற்றப்பட்டது. ஆனால், தற்போது அந்த புகைப்படம் மீண்டும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் குறித்து பெண் காவலர் ஒருவர் தமிழக முதலமைச்சர், டிஜிபி சைலேந்திர பாபு, மாநில மனித உரிமைகள் ஆணையம், மத்திய மண்டல ஐ.ஜி அலுவலகத்திற்கு புகார் மனுவை அனுப்பி உள்ளார்.

அதில், திருச்சியில் பணியாற்றும் டிஎஸ்பி பரவாசுதேவன், பெண் இன்ஸ்பெக்டருடன் படுக்கையில் உடைகள் இல்லாமல் நெருக்கமாக இருக்கும் இந்த புகைப்படம் திருச்சி மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் உள்ள வாட்ஸ்அப் குழுவில் வலம் வந்தது. ஏற்கனவே, இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்த டிஎஸ்பி இதேபோல் பல பெண் காவலர்களுக்கு பல ஆபாச படங்களை அனுப்பி உள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பெண் இன்ஸ்பெக்டருடன் நெருக்கமாக இருந்த, திருச்சி ஜீயபுரம் டிஎஸ்பி பரவாசுதேவனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஜீயபுரம் டிஎஸ்பி கூடுதல் பொறுப்பாக குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த டிஎஸ்பி பரவாசுதேவனை பொறுத்தவரை கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் கே.என். நேருவால் புகழ்ந்து பேசப்பட்டவர். மேலும், பரவாசுதேவன் மிகவும் திறமையானவர். குற்றவாளியை நிரபராதியாகவும், நிரபராதியை குற்றவாளியாகவும் மாற்றக்கூடிய திறமையை கொண்டவர் என்று பேசியிருந்தார்.