தொடர் மழை காரணமாக விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக டிசம்பர் 2 வரை மலை இருக்கும் என சென்னை வானிலை மைய்யம் தெரிவித்துள்ளது. மேலும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அரவிக்கப்ட்டுள்ளது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி அறிவித்துள்ளார். மேலும் அதே போல் தேனி மாவட்டத்திலும் தொடர் கனமழை காரணமாக, அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.