சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற சிட்லபாக்கம் கல்யாணசுந்தரம் தெருவில் பொன்னுதாஸ்(48) என்பவர் வசித்து வருகிறார் இவர் திருமுடிவாக்கம் பகுதியில் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மனைவி ஜான்சி ராணி (45) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த தம்பதியினருக்கு அபினேஷ் (18) என்ற மகனும், அனுசம்பிகா (13) என்ற மகளும் உள்ளனர் இதில் அபினேஷ் இன்ஜினியரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். அதேபோல அனுஷம் பிகா தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார் நேற்று முன்தினம் பொண்ணுதாசும், ஜான்சிராணியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பொன்னுதாஸ் ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்துவதற்காக வான் வங்கி மற்றும் தனக்கு தெரிந்தவர்களிடம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை கொடுக்க இயலாமல் பொன்னுதாஸ் சிரமப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.
அதோடு கடனை திருப்பி கேட்டு உறவினர்களும் அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர் தாய், தந்தையை இழந்து மகனும், மகளும் பரிதவித்து வருகிறார்கள் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.