fbpx

திருப்பதி ஏழுமலையானை குடும்பத்தோடு தரிசித்த துர்கா ஸ்டாலின்..!! தேவஸ்தான அதிகாரிகள் செய்த காரியம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்தினருடன் இன்று திருமலைக்கு சென்றார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்தனர். திருமலையில் தங்கிய அவர், காலை அபிஷேக சேவையில் ஏழுமலையானை தரிசித்தார்.

தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசிர்வாதம் செய்து, தீர்த்தம், லட்டு பிரசாதங்களை வழங்கினர். அவற்றைப் பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியில் வந்த துர்காவுடன் பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும், அறங்காவலர் குழு உறுப்பினர் பாலுவும் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.

Chella

Next Post

அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தியை அறிவிக்கும் தமிழ்நாடு அரசு..!! தீபாவளிக்கு கன்பார்ம்..!!

Fri Oct 13 , 2023
கடந்தாண்டு தீபாவளி போனஸ் 25% வழங்க வேண்டும் என போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், ரூ.7 ஆயிரத்தை வருமான வரம்பாக கருதி, 10% போனஸாக ரூ.8,400 அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவதை போலவே, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையால் ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் […]

You May Like